Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் புதிதாக 52 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 52 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Wed, 05 Aug 2020 10:58:38 AM

இந்தியாவில் புதிதாக 52 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 1 கோடியே 82 லட்சத்து 37 ஆயிரத்து 281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 6 லட்சத்து 92 ஆயிரத்து 837 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பாலும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

india,corona virus,infection,death,treatment ,இந்தியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு 857 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 19,08,255 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12.82 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5.86 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 39 ஆயிரத்து 795 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|