Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் புதிதாக 57 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 57 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 17 Aug 2020 11:03:12 AM

இந்தியாவில் புதிதாக 57 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. முதலில் தொற்று வேகமாக பரவிய ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில் தொற்று பரவல் வேகமாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 941 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 47 ஆயிரத்து 664 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து 921 ஆக உள்ளது.

corona virus,infection,india,treatment,kills ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,இந்தியா,சிகிச்சை,பலி

கொரோனா தொற்று பாதிப்புடன் 6 லட்சத்து 76 ஆயிரத்து 900 பேர் தற்போது மருத்துவ மனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 19 லட்சத்து 19 ஆயிரத்து 843 பேர் நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய 3,00,41,400 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 7,31,697 - மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags :
|