Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி.க்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி.க்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Wed, 08 July 2020 11:24:08 AM

சென்னை ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி.க்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் 71 ஆயிரத்து 230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்றுவரை 1,120 பேர் உயிரிழந்துள்ளனர்.

chennai,coronavirus,vulnerability,dgp,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,டிஜிபி,சிகிச்சை

சென்னையில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் முன் வரிசையில் நின்று பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களும் இந்த கொரோனா நோய் தொற்றால் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். சென்னை போலீசில் நேற்று வரை 1,347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags :
|