Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேல் மாகாணத்தில் 221 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று

மேல் மாகாணத்தில் 221 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று

By: Nagaraj Sat, 07 Nov 2020 1:25:44 PM

மேல் மாகாணத்தில் 221 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று

221 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா... மேல் மாகாணத்தில் புதிதாக 221 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளதுடன், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1385 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை மேல் மாகாணத்தில் நேற்று புதிதாக 199 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதேவேளை, பொரளை பொலிஸ் நிலையத்தில் 41 பொலிஸ் அலுவலர்களுக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

police officers,corona,upper province,nuwara eliya,identity ,பொலிஸ் அதிகாரிகள், கொரோனா, மேல் மாகாணம், நுவரெலியா, அடையாளம்

இதனையடுத்து, பொரளை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் இதுவரையில் 56 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பதுளை மாவட்டத்தில் மொத்தமாக இதுவரையில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு 2 ஆயிரத்து 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|