Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

By: Nagaraj Sat, 12 Dec 2020 10:40:21 PM

கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

தொற்றுப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது... கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 22 ஆம் திகதிக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதாகவும், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை டிசம்பர் மாதம் இறுதி பகுதிவரை நாட்டில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வாரங்கள் பண்டிகைக் காலம் என்பதனால் பொதுமக்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

corona,medical market,pcr test,details ,கொரோனா, மருதனார்மட சந்தை, பிசிஆர் பரிசோதனை, விவரங்கள்

இன்று (சனிக்கிழமை) இரவு வெளியாகும் பி.சி.ஆர். முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை மூடுவதா? அல்லது உடுவில் பகுதியை முடக்குவதா? என தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தில் மூவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் இருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் உடுவில் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் வசித்துவருபவர். உடுவில் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவருடைய கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவர்கள் தாமாக முன்வந்து தங்களை உடுவில் சுகாதார பிரிவினரிடம் பதிவு செய்து பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் அப்பகுதி சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகரிடம் தங்களுடைய விவரங்களை பதிவு செய்வதன் மூலம் தொற்று பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.350 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இரவு வெளியாக உள்ளன. அந்த முடிவுகளின் அடிப்படையில் மருதனார்மட சந்தையை மூடுவதா அல்லது உடுவில் பகுதியை முடக்குவதா என தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags :
|