Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்று பெரியவர்களை விட குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது

குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்று பெரியவர்களை விட குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது

By: vaithegi Fri, 29 July 2022 8:01:21 PM

குழந்தைகளுக்கு  ஏற்படும் கொரோனா தொற்று  பெரியவர்களை விட குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது

இந்தியா: இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி கொண்டு வருகிறது. இந்த வைரஸ் அண்டை நாடான சீனாவில் இருந்து பரவ தொடங்கியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இந்த தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் தொற்றின் வீரியத்தை குறைந்ததது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பது குறைந்துள்ளது. இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அதனால் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.

corona,children ,கொரோனா ,குழந்தைகள்

இதையடுத்து 12-18 வயது மற்றும் 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. தற்போது மக்களவையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த கேள்விக்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று பொதுவாக பெரியவர்களை விட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 12 வயதிற்குட்பட்ட சிரார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி கணக்கெடுப்பின்படி 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் டோஸ்கள் 9.96 கோடி (82.2 சதவீதம்) மற்றும் முதல் டோஸ்கள் 7.79 கோடியும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|