Advertisement

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானது

By: Nagaraj Thu, 17 Sept 2020 9:06:42 PM

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானது

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என்று பல கட்சியை சேர்ந்த தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

physicians,health,examination,ramarajan,treatment ,மருத்துவர்கள், உடல்நிலை, பரிசோதனை, ராமராஜன், சிகிச்சை

சினிமா உலகை சேர்ந்த பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் ராமராஜன் இன்று கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.

லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் ராமராஜன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Tags :
|