Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவது 2 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உலகம் முழுவது 2 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Tue, 18 Aug 2020 1:11:07 PM

உலகம் முழுவது 2 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோய் பரவலை கட்டுப்படுத்துவது கடும் சவாலாக உள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவது 2 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 76 ஆயிரத்து 862 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 64 லட்சத்து 84 ஆயிரத்து 031 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்து 037 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 1 கோடியே 47 லட்சத்து 75 ஆயிரத்து 636 பேர் குணமடைந்துள்ளனர்.

china,corona virus,infection,death toll,world ,சீனா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,உலகம்

கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விபரம் வருமாறு:-
அமெரிக்கா - 56,12,011
பிரேசில் - 33,63,235
இந்தியா - 27,01,604
ரஷியா - 9,27,745
தென் ஆப்பிரிக்கா - 5,89,886
பெரு - 5,35,946
மெக்சிகோ - 5,22,162
கொலம்பியா - 4,76,660
சிலி - 3,87,502
ஸ்பெயின் - 3,82,142
ஈரான் - 3,45,450
இங்கிலாந்து - 3,19,197
சவுதி அரேபியா - 2,99,914
அர்ஜெண்டினா - 2,99,126
பாகிஸ்தான் - 2,89,215
வங்காளதேசம் - 2,79,144

Tags :
|