Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று... ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று... ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் பாதிப்பு!

By: Monisha Sat, 24 Oct 2020 09:14:54 AM

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று... ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் பாதிப்பு!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றை குணப்படுத்த உலக நாடுகள் இறுதிக்கட்ட தடுப்பூசி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.14 கோடியைக் கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 11.48 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

usa,corona virus,infection,death,treatment ,அமெரிக்கா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இதையடுத்து, அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 57 லட்சத்தை நெருங்குகிறது. தற்போது வரை 28 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|
|