Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2 வாரங்களுக்கு முன்னர்தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் பீஜிங்கில் கொரோனா தொற்று கிடுகிடுகன உயர்வு

2 வாரங்களுக்கு முன்னர்தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் பீஜிங்கில் கொரோனா தொற்று கிடுகிடுகன உயர்வு

By: vaithegi Sun, 12 June 2022 07:47:18 AM

2 வாரங்களுக்கு முன்னர்தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் பீஜிங்கில் கொரோனா தொற்று கிடுகிடுகன உயர்வு

பீஜிங் : சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென கொரோனா தொற்று பரவல் கிடுகிடுகன உயர்ந்துள்ளது. நாட்டில் வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பதிவாகி வந்தது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பீஜிங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இக்கட்டுப்பாடுகள் 2 வாரங்களுக்கு முன்னர்தான் தளர்த்தப்பட்ட நிலையில் பீஜிங்கில் கொரோனா தொற்று கிடுகிடுகன உயர்வு. இந்த நிலையில் பீஜிங்கில் புதிய கொரோனா அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

china,corona,virus hotel ,சீனா,  கொரோனா,  வைரஸ் விடுதி

பீஜிங்கில் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் இரவுநேர கேளிக்கைகள், 'ஷாப்பிங்' உள்ளிட்டவற்றுக்கு பெயர்பெற்ற சாயோயாங் மாவட்டத்தில் தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக அங்குள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்று கொரோனா பரவலின் மையமாக உருவெடுத்துள்ளதாகவும், மேலும் சீனாவின் வர்த்தக தலைநகரமாக கருதப்படும் ஷாங்காயில் ஒரு அழகு நிலையம் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருதாக தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர் என தகவல் தெரியவந்துள்ளது.

Tags :
|
|