Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேல் எம்.பி.க்கு கொரோனா தொற்று; கூட்டத் தொடர் தற்காலிகமாக ரத்து

இஸ்ரேல் எம்.பி.க்கு கொரோனா தொற்று; கூட்டத் தொடர் தற்காலிகமாக ரத்து

By: Nagaraj Sat, 06 June 2020 09:10:09 AM

இஸ்ரேல் எம்.பி.க்கு கொரோனா தொற்று; கூட்டத் தொடர் தற்காலிகமாக ரத்து

இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கூட்டத் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

parliament,membership,cancellation of meeting,corona confirmed ,பாராளுமன்றம், உறுப்பினர், கூட்டம் ரத்து, கொரோனா உறுதி

ஆனால் பல்வேறு இடங்களில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய நோய்த்தொற்று காரணமாக 40-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சமி அபு ஷாகாதேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாராளுமன்ற கூட்டத்தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

அத்தியாவசிய பணிகள் இருந்தால் மட்டுமே பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள், ஊழியர்கள் வரவேண்டும் என்றும், மற்றவர்கள் வீடுகளில் இருந்தபடியே பணிகளை கவனிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் இதுவரை 17,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 290 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :