Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,649 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,649 ஆக உயர்வு

By: Monisha Mon, 27 July 2020 1:34:12 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,649 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 12,266 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 383 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது.

chengalpattu district,corona virus,infection,treatment,deaths ,செங்கல்பட்டு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 12,266 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 383 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,895 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 227 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்று பரவலை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் குழு பரிசோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags :