Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியது!

By: Monisha Tue, 18 Aug 2020 10:37:18 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்தை  தாண்டியது!

உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்தம் 27,02,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 876 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,797 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 19,77,780 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,73,166 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.9 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 73.2 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

india,corona virus,infection,testing,treatment ,இந்தியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பரிசோதனை,சிகிச்சை

கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் 7.31 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று புதிய உச்சமாக 8.99 லட்சம் சாம்பிள்கள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நேற்று வரை 3,09,41,264 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 8,99,864 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது. பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்தியபோதிலும், பாதிப்பு எண்ணிக்கை 8.81 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
|