Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 466 ஆக உயர்வு

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 466 ஆக உயர்வு

By: Monisha Tue, 11 Aug 2020 3:40:07 PM

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 466 ஆக உயர்வு

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 466 ஆக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை கண்டு வருகிறது. இதனால் மாவட்ட மக்கள் அச்சம் கலந்த பீதியுடன் காணப்படுகிறார்கள். வீடுகளில் முடங்கவும் முடியவில்லை, பிழைப்புக்காக வெளியே செல்லாமல் இருக்கவும் முடியவில்லை என்ற வாழ்க்கைப் போராட்டத்தோடு மக்கள் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறார்கள்.

நேற்று முன்தினம் வரையில் குமரி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 362 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதேபோல் 85 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று இரவு வரையில் 3 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

kumari district,corona virus,infection,treatment,kills ,குமரி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

நாகர்கோவில் தெற்கு சூரங்குடி பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதேபோல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த 48 வயது ஆணும், வடசேரி புதுக்குடியிருப்பை சேர்ந்த 54 வயது ஆணும் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார்கள்.

மேலும் நேற்று குமரி மாவட்டத்தில் 104 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள ஒரு வங்கி ஊழியரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 466 ஆக உயர்ந்துள்ளது.

Tags :