Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,168 ஆக உயர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,168 ஆக உயர்வு

By: Monisha Thu, 05 Nov 2020 10:03:13 AM

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,168 ஆக உயர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,168 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,34, 429ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 19,154 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.

perambalur district,corona virus,infection,treatment,kills ,பெரம்பலூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர், வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களில் தலா 2 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் ஒருவரும் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,168 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,108 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 39 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 397 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags :