Advertisement

நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 513-ஆக உயர்வு

By: Monisha Tue, 21 July 2020 2:54:35 PM

நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 513-ஆக உயர்வு

நீலகிரியில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 513-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் மதுரை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

nilgiris,corona virus,infection,treatment,kills ,நீலகிரி,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

கோவை மாவட்டத்துக்கு சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. மும்பை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நீலகிரியில் இதுவரை 513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 187 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 324 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் அத்தியாவசிய மருத்துவ தேவைகளை தவிர்த்து வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

Tags :