Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,660 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,660 ஆக உயர்வு

By: Monisha Tue, 01 Sept 2020 09:57:05 AM

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,660 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13,660 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 28 ஆயிரத்து 41 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது 52 ஆயிரத்து 578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 68 ஆயிரத்து 141 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் 7 ஆயிரத்து 322 பலியாகி உள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மாவட்டம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

virudhunagar district,testing,corona virus,treatment,kills ,விருதுநகர் மாவட்டம்,பரிசோதனை,கொரோனா வைரஸ்,சிகிச்சை,பலி

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 67 ஆயிரத்து 123 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 13,558பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 6,713 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 11,982 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 97 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 185 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13,660 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தினசரி 5 ஆயிரம் பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் முடிவுகள் தெரிவிக்கப்படவேண்டிய பரிசோதனைகள் தேக்கம் அடைந்து வருகின்றன. இந்தநிலையில் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் பலியானார். இதையடுத்து கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.

Tags :