Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

By: Nagaraj Wed, 04 Nov 2020 8:09:31 PM

அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள்... கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 30 வீடுகள் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வீடமைப்பு வளாகத்தில் வசிக்கும் அனைவரையும் தங்களின் வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

health service,report,province,corona,vulnerability ,சுகாதாரசேவை, அறிக்கை, மாகாணம், கொரோனா, பாதிப்பு

கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயத்தின், கொவிட்-19 பரவல் தொடர்பான நிலைவர அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்தில் அதிகளவானோருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 598 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 3 பேருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 297 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மேல் மாகாணத்தில் இதுவரையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று சந்தேகத்தில் 5 ஆயிரத்து 779 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் மாகாணத்தில 17 ஆயிரத்து 694 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள 23 மரணங்களில் 12 மரணங்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|