Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பினால் ஒரே நாளில் 75 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பினால் ஒரே நாளில் 75 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Sat, 11 July 2020 3:52:15 PM

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பினால் ஒரே நாளில் 75 பேர் உயிரிழப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 200 நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2.43 லட்சத்தை நெருங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,43,599 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 2 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

pakistan,coronavirus,corona death,corona prevalence ,பாகிஸ்தான், கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 1.49 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது. கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்து இடத்தில் உள்ளன.


Tags :