Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா அதிக பாதிப்பு கவுரத்தின் அடையாளமாம்; அதிபர் டிரம்பின் அதிரடி பேச்சு

கொரோனா அதிக பாதிப்பு கவுரத்தின் அடையாளமாம்; அதிபர் டிரம்பின் அதிரடி பேச்சு

By: Nagaraj Wed, 20 May 2020 8:29:13 PM

கொரோனா அதிக பாதிப்பு கவுரத்தின் அடையாளமாம்; அதிபர் டிரம்பின் அதிரடி பேச்சு

கொரோனா பாதிப்பு கவுரவத்தின் அடையாளம்... கொரோனா குறித்து அதிகளவு சோதனை நடத்தியதால் தான் அதிக பாதிப்புகள் உள்ளதாகவும், அதனை கவுரவத்தின் அடையாளமாக பார்ப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. பல நாடுகளுக்கும் பரவிய இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 3.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் மட்டும் 15.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona vulnerability,prestige,president trump,experiments ,
கொரோனா பாதிப்பு, கவுரவம், அதிபர் டிரம்ப், பரிசோதனைகள்

93,542 பேர் உயிரிழந்துள்ளனர். 3.08 லட்சம் பாதிப்புகளுடன் ரஷ்யா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், முதலிடத்தில் அமெரிக்கா இருப்பது கவுரவத்திற்கான அடையாளம் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: மற்ற நாடுகளை விட அதிகமான சோதனைகள் நடத்தியதால் தான் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன. நிறைய பாதிப்புகள் என்பதை ஒரு மோசமான விஷயமாக நான் பார்க்கவில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதை நல்லதாகவே பார்க்கிறேன். இதற்கு எங்கள் சோதனை மிகவும் சிறந்தது என்று அர்த்தம். எனவே நான் இதை கவுரவத்திற்கான அடையாளமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :