Advertisement

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

By: vaithegi Sat, 25 Mar 2023 3:02:31 PM

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனை அடுத்து கொரோனா தொற்றின் எண்ணிக்கை அண்மைக்காலமாக இந்தியாவில் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் 146 நாட்கள் கழித்து கடந்த 24 மணி நேரத்தில் 1,590 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

corona,india ,கொரோனா,இந்தியா

இதையடுத்து ஒரே நாளில் கொரோனா கேஸ்கள் உயர்ந்ததால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.எனவே அதன்படி, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,601 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் முன்னதாக தமிழ்நாடு,மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.

Tags :
|