Advertisement

கேரளாவில் புதிதாக 91 பேருக்கு கொரோனா உறுதியானது

By: Nagaraj Wed, 10 June 2020 09:43:54 AM

கேரளாவில் புதிதாக 91 பேருக்கு கொரோனா உறுதியானது

புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு... கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,095 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கான பலி இதுவரை 16 ஆக உள்ளது. இதில் 51 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 27 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். மீதமுள்ள 11 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

இதில் சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவர். கேரளாவில் இதுவரை மொத்தம் 848 பேர் குணமடைந்தனர். கட்டுப்பாட்டு பகுதிகள் புதிதாக 10 பகுதிகள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவற்றின் மொத்த எண்ணிக்கை 158 ஆக உள்ளது.

telangana,kerala,corona,vulnerability,health sector ,தெலுங்கானா, கேரளா, கொரோனா, பாதிப்புகள், சுகாதாரத்துறை

ஐதராபாத்: தெலுங்கானாவில் நேற்று 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் பலியாகி உள்ளனர். மற்ற மாநிலங்களை விட தெலுங்கானாவில் நோய் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. 25 மாவட்டங்களில் பாதிப்புகளே இல்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் புதிதாக 92 பேருக்கு நோய் பரவியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் 5 பேர் பலியானதுடன் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக உள்ளது. இதுவரை 1863
பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|