Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலி

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலி

By: Karunakaran Fri, 19 June 2020 09:27:33 AM

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவும் உலக அளவில் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 3½ லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலே கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

கர்நாடகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. முதலில் கொரோனா பரவல் அதிக அளவில் இல்லையென்றாலும், தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் கொரோனாவுக்கு 106 பேர் பலியாகி இருந்தநிலையில், நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

karnataka,coronavirus,corona death,bengalore ,கர்நாடகா,கொரோனா பாதிப்பு,கொரோனா வைரஸ்,பெங்களூரு

மேலும், நேற்று ஒரேநாளில் 210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 7,628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், புதிதாக 210 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 7,838 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை 4 லட்சத்து 73 ஆயிரத்து 507 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 8,709 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டன. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று கொரோனாவுக்கு ஒரே நாளில் 12 பேர் மரணம் அடைந்திருப்பது அங்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று திடீரென்று தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது.

Tags :