Advertisement

கொரோனாவால் உலகம் முழுவதும் 8.16 லட்சம் பேர் உயிரிழப்பு

By: Nagaraj Tue, 25 Aug 2020 10:53:14 AM

கொரோனாவால் உலகம் முழுவதும் 8.16 லட்சம் பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் 8 லட்சத்து 16 ஆயிரத்து 534 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 38 லட்சத்து 692 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 36 ஆயிரத்து 325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 767 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

united states,corona,casualties,brazil,mexico ,அமெரிக்கா, கொரோனா, பலி எண்ணிக்கை, பிரேசில், மெக்சிகோ

கொரோனாவில் இருந்து 1 கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 16 ஆயிரத்து 534 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள் பட்டியல் கீழ்வருமாறு:

அமெரிக்கா - 1,81,097, பிரேசில் - 1,15,451, மெக்சிகோ - 60,480, இந்தியா - 57,542, இங்கிலாந்து - 41,433, இத்தாலி - 35,441, பிரான்ஸ் - 30,528, ஸ்பெயின் - 28,872, பெரு - 27,813, ஈரான் - 20,776.

Tags :
|
|