Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா இறப்பு விகிதம் 10 மடங்கு குறைந்துள்ளது; அதிபர் டிரம்ப் தகவல்

கொரோனா இறப்பு விகிதம் 10 மடங்கு குறைந்துள்ளது; அதிபர் டிரம்ப் தகவல்

By: Nagaraj Wed, 08 July 2020 6:39:15 PM

கொரோனா இறப்பு விகிதம் 10 மடங்கு குறைந்துள்ளது; அதிபர் டிரம்ப் தகவல்

கொரோனா இறப்பு விகிதம் குறைந்து விட்டது... அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட இறப்பு விகிதம் “பத்து மடங்கு குறைந்துவிட்டது” என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் கூறியுள்ளார்.

புதிய நோயாளிகளின் அதிகரிப்பு இருந்தபோதிலும், அமெரிக்காவில் இறப்பு விகிதம் உண்மையில் அதிகளவில் இருப்பதாக சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்றுமட்டும் சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona,death rate,twitter,sign up,trump ,கொரோனா, இறப்பு விகிதம், டுவிட்டர், பதிவு, டிரம்ப்

ஏப்ரல் 21 அன்று பதிவான சராசரி 2,255 இறப்புகளுடன் தற்போது பதிவாகும் 556 என்ற சராசரி உயிரிழப்பு எண்ணிக்கையானது 75% குறைப்பு என்றாலும் அது “பத்து மடங்கு” அல்ல. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அன்று 2,749 பேர் உயிரிழந்தனர் ஜூலை 4 மற்றும் 5 ஆம் திகதிகளில், இறப்புகள் 265 மற்றும் 262 ஆக பதிவாகின இது 90% வீழ்ச்சியை காட்டுகின்றது.

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கொரோனா வைரஸினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும் நேற்று மட்டும் 993 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|