Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமான பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

விமான பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

By: vaithegi Thu, 29 Dec 2022 6:33:26 PM

விமான பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

இந்தியா: RT-PCR சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவிப்பு ... சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மிக தீவிரமெடுத்துள்ளது. இதனை அடுத்து இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டு விட்டது.

corona,certificate,central govt ,கொரோனா ,சான்றிதழ் ,மத்திய அரசு

இதனை அடுத்து முதல் கட்டமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் 2023 ஜனவரி 1 முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் RT-PCR சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
|