Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது!

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது!

By: Monisha Mon, 27 July 2020 12:01:27 PM

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

southern districts,corona virus,infection,treatment,deaths ,தென் மாவட்டங்கள்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்நிலையில் தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று 234 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4007 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 4,057 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இன்று 284 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 164 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,139ஆக அதிகரித்துள்ளது.

Tags :