Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் - தமிழக அரசு

கொரோனா நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் - தமிழக அரசு

By: Monisha Sat, 06 June 2020 1:08:18 PM

கொரோனா நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் - தமிழக அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு ஜூன்-30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

coronavirus,corona patient,private hospital,fee,govt of tamilnadu ,கொரோனா நோயாளி,தனியார் மருத்துவமனை,கட்டணம்,தமிழக அரசு

லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணமாக வசூலிக்கலாம்.

தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம். மேலும் நிர்ணயிக்கப்பட்டது அதிகபட்ச கட்டணம் என்பதால் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags :
|