Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை .... தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை .... தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

By: vaithegi Thu, 22 Dec 2022 1:39:37 PM

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை     ....   தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை:முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் .... சீனாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஒமைக்ரான் பி எஃப் 7 வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி கொண்டு வருகிறது. இதனால் சீனாவில் பாதிப்புகளும் , உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே வருகின்றன . கொரோனா பரவல் உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து அனைத்து மாநில அரசுகளும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் .மேலும் அனைத்து கொரோனா நோயாளிகளின் மாதிரிகளையும் மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் , தினமும் மரபணு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

chief minister,consultative meeting,corona ,முதலமைச்சர்  ,ஆலோசனை கூட்டம் ,கொரோனா

இதையடுத்து இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

விமான நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :