Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக நாடுகளோடு ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவு - பிரதமர் மோடி

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவு - பிரதமர் மோடி

By: Karunakaran Sun, 28 June 2020 10:00:55 AM

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவு - பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனை அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாக்டர் ஜோசப் மார் தோமாவின் 90-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றபோது, அதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவ திட்டமான ஆயுஷ்மான் பாரத் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

pm modi,coronavirus,corona prevalence,india ,பிரதமர் மோடி, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, இந்தியா

மேலும் அவர், உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு எனவும், பொது முடக்கம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் விழுக்காடு இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்திலும், கொரோனா பலி எண்ணிக்கையில் 8-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :