Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது - தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது - தேவேந்திர பட்னாவிஸ்

By: Karunakaran Tue, 07 July 2020 1:19:10 PM

மும்பை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது - தேவேந்திர பட்னாவிஸ்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. மராட்டியத்தில் தலைநகர் மும்பையை அடுத்து தானே மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தானே மாவட்டத்தின் தானே, நவிமும்பை, கல்யாண்-டோம்பிவிலி, மிராபயந்தர், உல்லாஸ்நகர், ராய்காட் மாவட்டத்தின் பன்வெல் ஆகிய இடங்களில் கடந்த 3 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து கொரோனா குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

devendra patnavis,corona prevalence,mumbai,metropolitan ,தேவேந்திர பட்னாவிஸ், கொரோனா பாதிப்பு, மும்பை, பெருநகரம்

அதன்பின் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், மும்பை பெருநகர எல்கைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது. இங்கு கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். பரிசோதனை செய்த ஒரு நாளில் முடிவை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர், 3 நாள் சுற்றுப்பயணத்தின் போது, கொரோனா நிலைமை தொடர்பாக அறிந்தவற்றை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிற்கு அறிக்கையாக சமர்ப்பிப்பேன் என்று கூறியுள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|