Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

By: Nagaraj Wed, 08 July 2020 08:47:54 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

தினமும் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பரவல் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தை கடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4,988 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 217 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 5,205 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 3,356 பேர் குணமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருந்தொற்று பாதிப்பு 2,730 ஆக இருந்தது. நேற்று 106 பேருக்கு தொற்று ஏற்பட்டது. எனவே இங்கு பாதிப்பு எண்ணிக்கை 2,836 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,137 பேர் குணமடைந்துள்ளனர்.

thiruvallur,increase,corona,impact,mla,healed ,
திருவள்ளூர், அதிகரிப்பு, கொரோனா, பாதிப்பு, எம்எல்ஏ, குணமடைந்தார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்கெனவே 6,855 ஆக இருந்தது. நேற்று மேலும் 87 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6,942 ஆக உயர்ந்தது. இவர்களில் 3,954 பேர் குணமடைந்தனர்.

கடந்த மாதம் 12-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி 26 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.

வேலூர் மாவட்டத்தில் 3 மருத்துவர்கள் உள்ளிட்ட 99பேருக்கு பெருந் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,228 ஆக உயர்ந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே 2,534 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 99 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 2,633 ஆனது.

Tags :
|
|
|