Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இன்று மற்றும் நாளை கொரோனா தடுப்பு ஒத்திகை

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இன்று மற்றும் நாளை கொரோனா தடுப்பு ஒத்திகை

By: vaithegi Mon, 10 Apr 2023 10:43:45 AM

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இன்று மற்றும் நாளை கொரோனா தடுப்பு ஒத்திகை

இந்தியா: இந்தியாவில் 8 மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. இதேபோல கர்நாடகா, ஹிமாச்சல் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் 5 சதவிகிதத்திற்கும் அதிகமான கொரோன பாதிப்புகள் பதிவாகி கொண்டு வருகின்றன.

இதனை அடுத்து சராசரியாக நாடு முழுவதும் 6 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நாள் தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

corona,hospital ,கொரோனா , மருத்துவமனை


இதன் இடையே கடந்த 7-ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடும் முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்று முதல் 2 நாட்களுக்கு கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. மருத்துவ பரிசோதனைகள், மருத்துவமனையில் தயார் நிலைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை ஒத்திகை பார்க்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் புதிய வகை மரபணு மாற்ற வைரஸ் பரவலை தடுக்க பிரத்யேக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Tags :
|