Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் முழு வேகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணி

தமிழகத்தில் முழு வேகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணி

By: vaithegi Tue, 04 Apr 2023 12:47:57 PM

தமிழகத்தில் முழு வேகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணி

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவருக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிகிச்சை மருந்துகள், நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

corona,drugs,patients ,கொரோனா ,மருந்துகள், நோயாளிகள்

எனவே அதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தற்போது கொரோனா சிகிச்சைக்காக 150 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தற்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 4 பேர் கொரோனா வைரஸ் தொடர்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் 1 நபருக்கு மட்டும் ஆக்ஸிஜன் தேவை உள்ளது. அதனால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|