Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்ப வேண்டும் ...பள்ளிக்கல்வித்துறை

தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்ப வேண்டும் ...பள்ளிக்கல்வித்துறை

By: vaithegi Tue, 18 Apr 2023 3:37:51 PM

தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்ப வேண்டும் ...பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு ... தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரவில்லை என்று கடந்த சில நாட்களாக புகார் எழுந்து கொண்டு வருகிறது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைகள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும். தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்.

department of school education,teachers,private schools ,பள்ளிக்கல்வித்துறை,ஆசிரியர்,தனியார் பள்ளிகள்

மேலும் ஆங்கில வழி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டும். தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை அனுப்ப தவறினால் அப்பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு வருகிற 19-ம் தேதிக்குள் நியமன ஆணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

Tags :