Advertisement

பெரு நாட்டில் 24 மணி நேரத்தில் 4056 பேருக்கு கொரோனா உறுதி

By: Nagaraj Mon, 25 May 2020 11:42:36 AM

பெரு நாட்டில் 24 மணி நேரத்தில் 4056 பேருக்கு கொரோனா உறுதி

4056 பேருக்கு புதிதாக பாதிப்பு... கொரோனா பாதிப்பு அதிகரித்து பெருவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,056 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெருவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 4,056 பேர் பாதிக்கப்பட்டனர்.

peru,economic impact,corona,multilateral,relaxation ,பெரு, பொருளாதார பாதிப்பு, கொரோனா, பலதுறை, தளர்வுகள்

இதனால் பெருவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,754 ஆக அதிகரித்தது. இதுவரை 3,373 பேர் பலியாகினர். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 788,341 பேர் பரிசோதிக்கப்பட்டனர். தலைநகர் லிமாவில் தான் அதிகமானவர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

ஜூன் 30 வரை ஊரடங்கு அமலில் உள்ளதாக கூறப்படுகிறது. நோய் பரவுவதை தடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் பெரு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை 20,000 ஆக அதிகரித்தும், தீவிர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கையை 1000 முதல் 2000 ஆகவும் உயர்த்த அரசு அறிவித்தது.

மேலும் பொருளாதார பாதிப்புகளை கருத்திற்கொண்டு பல துறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|