Advertisement

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 65.44 சதவீதமாக உயர்வு

By: Nagaraj Sun, 02 Aug 2020 10:13:49 PM

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 65.44 சதவீதமாக உயர்வு

கொரோனா மீட்பு விகிதம் அதிகரிப்பு... இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் 2.13 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 65.44 சதவீதமாக அதிகரித்ததாகவும் மத்திய சுகாதாரதுறை தெரிவித்தது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. உலகில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைவாக உள்ளதாக சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார். தற்போது நாட்டின் இறப்பு விகிதம் (CFR) 2.13 சதவீதமாக குறைந்துள்ளது.

நோய் பாதிப்புகளை குறைக்க தொடர்ந்து நடத்தப்படும் கணக்கெடுப்பு, பரிசோதனை, அணுகுமுறை அடிப்படையிலான மருத்துவ பரிசோதனைகள், வீட்டு தனிமை ஆகியவற்றின் மூலமாகவும் கொரோனா மீட்பு விகிதம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

corona,recovery increase,death toll,decrease ,
கொரோனா, மீட்பு அதிகரிப்பு, பலி எண்ணிக்கை, குறைந்தது

சுகாதாரதுறை அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 51,225 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது.

இதன் மூலம் இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 65.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், கடுமையான பாதிப்புகளை திறம்பட நிர்வகிப்பதன் மூலமாகவும் , சுகாதார பணியாளர்களால் பாதிப்பு அதிகமான நபரை பராமரிப்பதன் மூலமாகவும், நாடு முழுவதும் (CFR -Case Fertility Rate) குறைவதற்கான வழியாகும்.

corona,recovery increase,death toll,decrease ,
கொரோனா, மீட்பு அதிகரிப்பு, பலி எண்ணிக்கை, குறைந்தது

கொரோனா தொற்று பாதிப்பு முன்பு 2.25 சதவீதத்தில் இருந்து 2.13 சதவீதமாக குறைந்துள்ளது. அத்துடன் மூன்றடுக்கு மருத்துவமனை மற்றும் அதன் கட்டமைப்பு, மருத்துவர்களின் சிறந்த சிகிச்சை, நோயாளிகளின் ஒத்துழைப்பும் மீட்பு விகிதம் உயர்வதற்காண காரணியாகும்.

தொடர்ச்சியாக 5 வது நாளாக, இந்தியா ஒரு நாளைக்கு 30,000 க்கும் மேற்பட்ட தொற்று மீட்டெடுப்புகளைக் கண்டது. தற்போது 5,67,730 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த வழக்குகளில் 32.43 சதவீதம் ஆகும். கொரோனா மீட்பு விகிதம் ஜூன் மத்தியில் 53 சதவீதமாக இருந்தது. நேற்று நிலவரங்களுடன் ஒப்பிடுகையில் 65.44 சதவீதமாக அதிகரித்தது. இதற்கிடையில், ஒரு நாளில் 54,735 பேர் பாதிக்கப்பட்டனர். 853 பேர் பலியாகினர்.

இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.50 லட்சமாக உயர்ந்தது, பலி எண்ணிக்கை 37,364 ஆக உயர்ந்தது. இவ்வாறு தெரிவித்தது.

Tags :
|