கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீடிப்பு
By: Nagaraj Mon, 14 Sept 2020 9:32:34 PM
கட்டுப்பாடுகள் நீடிக்கிறது... நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீடிப்பதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.
இதன்படி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21ஆம் திகதி வரை தொடரும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நியூசிலாந்தில் கொவிட்-19
கட்டுப்பாடுகள் அடுத்த ஒரு வாரத்திற்குத் தொடரும். இதனைத் தொடர்ந்து
ஒக்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21ஆம் திகதிவரை தொடரும்.
கொவிட்-19
தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும். நியூஸிலாந்து
மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என கூறினார்.
நியூசிலாந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 1,798பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். 24பேர் உயிரிழந்துள்ளனர்.