Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா மீண்டும் உயர்வு .. அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் முககவசம் கட்டாயம்

கொரோனா மீண்டும் உயர்வு .. அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் முககவசம் கட்டாயம்

By: vaithegi Mon, 17 Apr 2023 10:05:32 AM

கொரோனா மீண்டும் உயர்வு   ..   அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் முககவசம் கட்டாயம்


சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்போது நீதிமன்றங்களிலும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இது பற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் முக கவசம் அணிவது கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

mask,hospital,court ,முககவசம் ,மருத்துவமனை,நீதிமன்ற

மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்; வழக்கு பட்டியலில் இல்லாத நிலையில் வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகம் போன்றவற்றில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட வேண்டும் எனவும், நீதிமன்ற அறை வாயில் மற்றும் முக்கிய இடங்களில் சானிடைசர் வைக்கப்பட வேண்டும் எனவும்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

Tags :
|