Advertisement

அமெரிக்காவில் மீண்டும் உயரும் கொரோனா

By: vaithegi Tue, 01 Aug 2023 11:19:21 AM

அமெரிக்காவில் மீண்டும் உயரும் கொரோனா

அமெரிக்கா: அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தகவல்.. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் அது கடந்த சில மாதமாக கொஞ்சம் குறைந்து உள்ளது.

இந்த நிலையில் கால மாற்றத்திற்கு தகுந்தாற் போல கொரோனா பரவல் ஒவ்வொரு நாடுகளிலும் உருமாற்றம் பெற்று அதிகரிக்கவும், குறையவும் செய்கிறது. அந்த வகையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சற்று உயர்ந்தது.

corona,usa ,கொரோனா ,அமெரிக்கா

அதனை தொடர்ந்து இந்தாண்டு ஜூலை 15 ஆம் தேதி மேலும் அதிகரித்து கொரோனாவால் 7100பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்து இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தகவல் தெரிவித்து உள்ளது.

யோதயடுத்து இது குறித்து வெளியான தகவலில் கடந்த 6 அல்லது 7 மாதங்களாக குறைந்திருந்த கோவிட் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags :
|