Advertisement

உலக மக்களை மிரள வைக்கும் கொரோனா..

By: Monisha Fri, 15 July 2022 8:10:32 PM

உலக மக்களை மிரள வைக்கும் கொரோனா..

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் 56,51,65,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 53,67,78,794 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 63,81,884 பேர் உயிரிழந்துள்ளனர்.உலகம் முழுவதும் 38,908 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 54 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது.ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

corona,mask,distance,spread ,கொரோனா.,உயிர், முககவசம்,உலகம்,

கொரோனாவால் உலகம் முழுவதும் 1,364 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 63,30,785 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளதால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

Tags :
|
|