Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

By: vaithegi Tue, 18 Oct 2022 11:57:42 AM

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு நிலவரம்

புதுடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 63.01 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளை விட கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும், இன்னும் முற்றிலுமாக கொரோனா வைரஸ் அழியவில்லை. அதுவே இந்த அதிகரிப்பிற்கு காரணம் ஆகும். கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி இருக்கிறது.

இதனை அடுத்து இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,542 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,32,430 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 26,449- ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,919- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,77,068- ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,913 ஆக உயர்ந்தது.

Tags :
|