Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

By: vaithegi Sat, 12 Nov 2022 3:01:50 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியா: உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன.தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மட்டும் தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறந்தவர்கள் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 842 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,64,810 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனாவால் நேற்று 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் கேரளாவை சேர்ந்தவர்கள் 5 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,520 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 12,752 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

Tags :
|