இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா நிலவரம்
By: vaithegi Sun, 26 Mar 2023 12:45:14 PM
இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனை அடுத்து கொரோனா தொற்றின் எண்ணிக்கை அண்மைக்காலமாக இந்தியாவில் அதிகரித்து கொண்டு வருகிறது.இதையடுத்து இந்தியாவில் புதிதாக 1,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,890 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து கொண்டு தான் வருகிறது. 500க்கு கீழே பதிவாகி வந்த நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு இன்று ஆயிரத்து 890-ஐ தாண்டி பதிவானது.
மேலும் இதுவரை மட்டும் இந்தியாவில் 9,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உ யிரிழந்துள்ளனர்.