Advertisement

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா நிலவரம்

By: vaithegi Tue, 28 Mar 2023 11:59:53 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா நிலவரம்

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.33 கோடி

இதனை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1805 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,981 ஆக பதிவாகியுள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

மேலும் இந்தியாவில் இதுவரை மட்டும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,841 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,65,703 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,20,65,65,361 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,339 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|