Advertisement

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு நிலவரம்

By: vaithegi Sat, 01 Apr 2023 11:55:37 AM

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியா: இந்தியாவில் கடந்த 2 நாட்களாவே 3 ஆயிரத்திற்கும் மேல் பதிவான கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது.

இதனை அடுத்து நேற்று ஒருநாளில் மட்டும் 3,095 பேருக்கு கொரோனா பாதிப்புக் கண்டறியப்பட்ட நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,995 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,354 ஆக பதிவாகியுள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இந்தியாவில் இதுவரை மட்டும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,876 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,71,551 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220,66,09,015 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 9,981 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|