Advertisement

உலகளவில் கொரோனா நிலவரம்

By: vaithegi Mon, 28 Nov 2022 07:51:54 AM

உலகளவில் கொரோனா நிலவரம்

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. அதன்பின், கொரோனா வைரஸ் 225-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பல்வேறு நாடுகளில் அதை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தன.

இதன்பின், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமடைந்தன. இருப்பினும், வைரசானது, உருமாற்றமடைந்து பாதிப்பு உயந்து கொண்டே வருகிறது.

corona,worldwide ,கொரோனா ,உலகளவில்

இதையடுத்து இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 61 லட்சத்து 32 ஆயிரத்து 673 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 48 லட்சத்து 73 ஆயிரத்து 971 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 62 கோடியே 46 லட்சத்து 22 ஆயிரத்து 516 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 66 லட்சத்து 36 ஆயிரத்து 186 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|