Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

By: vaithegi Sun, 24 July 2022 10:02:03 PM

தமிழகம் முழுவதும் இன்று  ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. மேலும் தினசரி பாதிப்பு என்பது 2,500யை கடந்தது. இதனால் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், மேலும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் அரசு விரைப்படுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்பதால் இதனை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

அதனபடி கடந்த மே மாதம் 8ஆம் தேதி, கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மற்றும் ஜூலை 10ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில், 32 வது வாரமாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற்றது இன்று காலை 7 மணிக்கு மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது.

corona,vaccine ,கொரோனா ,தடுப்பூசி

தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி, 6 மாதங்கள் நிறைவடைந்தவர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசிம் போட்டு கொள்ள முடியும். முன்னதாகவே முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் 75வது சுதந்திர தினத்தையொட்டி செப். 28 வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவதாக மத்தியஅரசு அறிவித்துள்ளது.

இம்முகாம் மூலம் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை போடாத, 1.5 கோடி மற்றும் பூஸ்டர் டோஸ் போடாத 3.5 கோடி பேருக்கு, கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது

Tags :
|