Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவல் வரும் வாரங்களில் அதிகரிக்கும்; அமைச்சர் தகவல்

கொரோனா பரவல் வரும் வாரங்களில் அதிகரிக்கும்; அமைச்சர் தகவல்

By: Nagaraj Mon, 10 Aug 2020 2:06:29 PM

கொரோனா பரவல் வரும் வாரங்களில் அதிகரிக்கும்; அமைச்சர் தகவல்

புனே மற்றும் தானே பகுதிகளில் கொரோனா பரவல், வரும் வாரங்களில் உச்சமடையும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தொற்று அதிகம் பாதித்தப் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் அதிகம். பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

maharashtra,corona,spread,increase,vulnerability ,மகாராஷ்டிரா, கொரோனா, பரவல், அதிகரிப்பு, பாதிப்பு

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் புனே மற்றும் தானே பகுதிகளில் கொரோனா பரவல், வரும் வாரங்களில் உச்சமடையும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபே கூறியிருப்பதாவது: “புனே மற்றும் தானேவில் வரும் வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பகுதிகளும் ஏற்கெனவே கொரோனா பாதிப்பின் உச்சத்தின் மத்தியில் உள்ளன. மும்பையைப் போல, பாதிப்புகள் பின்னாளில் வீழ்ச்சியடையும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 262 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|