Advertisement

சென்னை மக்களை கதிகலங்க செய்கிறது கொரோனா பரவல்

By: Nagaraj Wed, 27 May 2020 9:02:40 PM

சென்னை மக்களை கதிகலங்க செய்கிறது கொரோனா பரவல்

சென்னை மக்களை கதிகலங்க விட்டு வருகிறது கொரோனா... சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 127-ஆக உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது.


coronavirus,impact,madras,acute spread,enrichment ,கொரோனா, பாதிப்பு, சென்னை, தீவிரமாக பரவல், வளசரவாக்கம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,145 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் 1,525 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,285 பேருக்கும், அண்ணாநகரில் 975 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

coronavirus,impact,madras,acute spread,enrichment ,கொரோனா, பாதிப்பு, சென்னை, தீவிரமாக பரவல், வளசரவாக்கம்

தண்டையார்பேட்டையில் 1,160 பேரும், தேனாம்பேட்டையில் 1,262 பேரும், திருவொற்றியூரில் 344 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 758 பேருக்கும், பெருங்குடியில் 203 பேருக்கும், அடையாறில் 653 பேருக்கும், அம்பத்தூரில் 484 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆலந்தூரில் 157 பேருக்கும், மாதவரத்தில் 256 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 197 பேருக்கும், மணலியில் 156 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Tags :
|
|